சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடைபிடிக்கப்படும் பச்சை பட்டினி விரதம்

0


சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் அம்பாள் விரதம் இருந்து உலக ஜீவன்களை ரட்சித்து வரும் நிகழ்வு நடத்தப்படுகிறது. இந்த விரதம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா வருகிற 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

அதன்படி இந்த ஆண்டு வருகிற 11-ந் தேதி முதல் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த 28 நாட்களும் கோவிலில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர் மோர், கரும்பு, பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படும். அம்பாள் விரதம் இருந்து உலக ஜீவன்களை ரட்சித்து வரும் நிகழ்வு நடத்தப்படுகிறது.

இந்த 28 நாட்களும் அம்பாளுக்கு நைவேத்தியம் படைக்க மாட்டார்கள். இளநீர், பானகம், நீர் மோர், கரும்புச் சாறு உள்ளிட்ட பானங்களே அன்னையின் ஆகாரம். இதற்கு ‘பச்சை பட்டினி விரதம்’ எனப் பெயர். பச்சை பட்டினி விரதம் முடிந்ததும் அம்பாள் பூச்சொரிதல் கண்டருள்வார்.

Leave a Reply